இரவின் பிடியில்

கருமை நிறவானாம்
தீப்பெட்டிச் சுவரின்
மருந்தில்…விண் கற்கள்
தீக்குச்சிகளாய் வழுக்கி
உரச…அவை எரிந்து ஒளிகொடுத்துச்
சாம்பலாகும்
இரவில்; அவ் ஒளியில்
இரத்தினக்கற்களைத் தொலைத்து
இரைக்கலையும் நாகமாய்
ஏதும் ‘கவிதை’ இரை
சிக்குமா? எனப்பசித்துத் திரிகிறது
என் உணர்வு !
எக்கி…ஒருவிண் கல்
எரிநட்சத்திரம் ஆக..,
மறு எரிகல் ஒளியிலேனும்…வடிவான
ஒர்கவிதைப்
பொறியினைக் காணும்
பொறுமையில்லாத் தவிப்பில்
இரவின் பிடியில் ஏங்கிடுது
என்மனது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply