வலை

எச்சிலில் இருந்து இழைதிரித்து 
உறையவைத்து 
இச்சிறு சிலந்தி 
எழில்வலை பின்னுகிற 
வேகத்தைக் கண்டு 
வேர்த்துக்கொட்டிய தெனக்கு!
யாரிதற்கிவ் ஆற்றலை அருளியது?
அதன் திறனை 
ஆசான் யார் ஆற்றுப்படுத்தியது?
விதவிதமாய் 
யாவருடன் திட்டத்தை எங்கு தீட்டிப் 
பொறி வைத்து 
தன்னிரையை ஏய்த்து 
தானாய் விழவைத்து 
தன் பசியைப் போக்குதது!
சாதாரண காற்றே 
அடிக்கடி வலையறுத்து 
ஆக்கினைப் படுத்தினாலும் 
வெடித்துப் பசிவலைக்குள் தான் சிக்கக் 
கூடாது 
என்று மறுபடியும் மறுபடியும் 
அறுந்த வலை 
‘பொத்தி’ ஒரு மீனவனைப் போல் 
வலையைச் சீர்திருத்தி 
சித்தமும் சோராது சீவியம் நடத்திடுது!
ஆனால் அதன் வலையில் ஆப்பிட்டவை 
தம்மை 
மீட்டெடுக்கத் தெரியாமல் 
மேலுலகம் சேர்கிறது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply