The frontal tower stands erect
As in embodiment of sanctified infinity
With the ethereal canopy bowing down
And the clouds floral crowning the pinnacle.
The resounding bell is there
To awaken the environs at dawn;
Colour ful ‘yali’ ‘pillars’ structurally splendid,
Halls standing up in majestic arrogance,
Lamp-lit brilliance of grace,
Flames that melt one’s soul
The ‘sanctum sanctorum’ a metaphor for liberation,
The charting of ‘manthrams’, the rhythmic cadences,
Fragrance of flowers that sooths
And anoints the mental injuries,
Incense from ‘sandal’ and ‘ahil’ vapours
Stone statues illuminating you
From within-
If your thoughts relaxed and got focussed,
The holy water tank that propels you
Into outer space, while you sit aside,
And the sand- spread ground, around-
All these await you eveready
To speak nonverbally and point towards
Liberation.
If it’s a festival day…
The sanctity gets multiplied manifold
Divinity rejuvenates the vicinity
The temple bell from Nallur
Will save our values from extinction.
Oh, nallur,
Please listen to my questions,
Reveal your secrets
How do you manege to be evergreen
Just as paradise itself ?
Many, there are shrines
In nooks and corners
How is it that you nurse
An excellence
Unique and unparralled
How do you process minds
And sublimate them
And from generation to generation
Continue perpetuation
Of spiritual well being?
Why is it that only the winds
That blow in your neighbourhood
Send through me
A thrill down the spine?
Why is it that your shadow alone
Is capable of curing
Our worries, wars, a ilments.
Leading us to
Peace and freedom from fear?
Why is it that your teritory alone
Spreads an indescribable fragrance?
While a perfect solution beyond sciences
Sits in the Holy of Holies of your shrine
Cooling down this globe?
When i ask thus, prostrate
And get up,
A rare feeling, a tender impulse
Sprouts from within
Spreading all over the limbs
A new dawn-a resurrection.
Dear ones,
Nallur, some day will answer
My quaries.
I shall thank you to allow me
To stand and wait-till then.
நல்லூர்
வானம் குனிந்து வணங்க… முகில் திரண்டு
பூச்சூட்ட, கோடி
புனிதம் குவிந்ததெனக்
கோபுரம் நிமிர்ந்துளது!
குரல்வைக்கும் நாதமணி
நாலு திசைகளையும் துயிலெழுப்ப வீற்றிருக்கு!
வர்ணம் கலந்து வடிவொழுகும் ‘யாளித்தூண்’,
சிற்பச் சிறப்பில்
திமிர்ந்து நிற்கும் மண்டபங்கள்,
ஊற்று அருள்விளக்கு,
உயிர் கரைக்கும் தீபங்கள்,
மோட்சத்தைக் காட்டுகிற மூலஸ்த்தானம்…மேளம்
தாளம் அதிரச் சாந்திதரும்
பூசைகால
மந்திரங்கள்,
மனசை வருடுகிற மலர்வாசம்,
சந்தனம் அகிற் புகைகள்,
தளர்ந்து மனமொடுங்கின்…
கண்ணுள் ஒளிபரப்புங் கற்சிலைகள், அமர்ந்திருந்தால்…
அந்தரத்தில் மிதக்கவைக்கும் கேணியடி,
சுற்றிவர
ஞானம் பரப்பும் மணல்வீதி…இவையனைத்தும்
மோன மொழிபேசி
முத்திதரக் காத்திருக்கு!
திருவிழா நாளென்றால்…
பலமடங்கு புனிதமிந்தத்
தெருவை நனைக்கும்ளூ தெய்வீகம் கரைபுரண்டித்
திசையைப் புதுப்பிக்கும்ளூ
‘தினம்’ தோறும் நமைத்திருத்த
நசியாதெம் விழுமியத்தை நல்லூர் மணிகாக்கும்!
நல்லூரே உன்னிடத்தில் நான்சிலதைக் கேட்கின்றேன்ளூ
சொல்லுன் இரகசியத்தை!
சுவர்க்கமென எப்படிநீ
என்றும் இளமையுடன் இனிமைதந் திருக்கின்றாய்?
சந்திக்கோர் கோவில் இருப்பினும் உன்
தாழடியில்
எங்குமிலா ஓர்சிறப்பை எப்படிநீ வளர்க்கின்றாய்?
என்றென்றும் ஞான இசையில்
மனங்களினைப்
பண்படுத்திப்,
பக்குவப் படுத்தி, இறை இன்ப
அன்பைப் பரம்பரையாய் எவ்வாறு ஊட்டுகிறாய்?
உன்தெருவின் காற்றுமட்டும்
உயிர்சிலிர்க்க வைக்கிறதே!
உன்நிழல் தான் துன்பத்தை…துரத்திவரும் போர், பிணியைச்
சங்கரித்துப்… பயநெஞ்சில்
சாந்திதந்து மீட்கிறதே!
உன்சூழல் அறியவொண்ணாச் சுகந்தம் பரப்பிடுதே!
விஞ்ஞானம் அறியா விடையொன்றுன்
கருவறையில்
எஞ்ஞான்றும் இருந்திவ்
இத மண்ணைக் குளிர்த்திறதே!
எவ்வாறெனக் கேட்டு விழுந்தெழும்ப…
பரவசத்தில்
மெல்லிய உணர்வொன்றென் மேனியெங்கும் பரவியது!
உள்ளே ஒரு உதயம் உருவாச்சு!
அன்பர்களே…
நல்லூர் ஒருநாளென் கேள்விகட்குப் பதிலளிக்கும்
அன்றுவரை எனைஅருகில் இருக்கவிட்டால்
அதுபோதும்.
Tamil original-T.Jeyaseelan
Translated by-Kavignar R.Murugaiyan