நேர்த்தி

தவழ்ந்து… நடந்து… இன்று
தானாய் வேகம் எடுத்து
எவரையும் கணக்கெடாது இங்கும்
ஓடத் தொடங்குது நோய்!
தனிமைச் சிறைக்கதவு ஏன் திறந்த
தெனும் தர்க்கம்
கனவில்;
நனவினிலோ கரையுடைக்கும் தொற்றாறு!
கால இடைவெளி
அரைவாசி யாகுகையில்
பாய்ச்சல் பரவல்
இரண்டு மூன்று மடங்காச்சு!
வேறுதிக்கில் பயணித்து…. விசம் வைத்த
வேகம் …நம்
வேரிலின்று… விருட்சம்
விளங்காதா இருக்கிறது?
சாராயக் கடையில்மட்டும்
சமூக இடைவெளியைச்
சீராய்க் கடைப்பிடிக்கும் திசைவெளி
என்னாகிடுமோ
காலமே…வெப்பமே …கடவுளே….
காப்பாற்று!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply