அர்த்தப் புன்னகை

முன்னர் ஒருபோதும் அறியப் படாதவர்கள்,
முன்பின் கதைத்து
அறிமுகமு மிலாதவர்கள்,
ஒருவர் இருவரில்லை…ஓரிரு நூறுபேர்கள்
தெருவினிலும் கோவிற்
திருவீதி உள்ளேயும்
புன்னகைத்தார்
பதிலுக்கு புன்னகைத்துக் கொள்கின்றேன்!
ஓரிரு வார்த்தை
அவர்களுடன் கதைக்கின்றேன்.
ஓரிரண்டு தெரிந்த என்பாஷை
அவர்கதைக்க
என்நிலை உணர்ந்ததனால்
அளவாய்க் கதைக்கிறேன்.
அவர்களின் ஊரை முன் நான்கண்ட பிரமிப்பு
அவர்களது முகத்தினிலே
இன்றென்முன் உணர்கிறேன்.
அவர்களது புன்னகையும்
வார்த்தைகளும் பிரமிப்பும்
என்னுடைய புன்னகையும்
வார்த்தைகளும் பிரமிப்பும்
அர்த்தமுள்ள தாகிடமா?
அர்த்தமற்றே போயிடுமோ?
என்றஒரு கேள்வி என்னுள் எழுந்தாலும்
ஓவ்வொரு தடவையும்நான்
உண்மையாயே விடைகொடுப்பேன்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply