மீட்பது எப்போ?

கண்ணுக்குத் தெரியாக் கறுமக் கிருமிகளை
மண்ணுக் கனுப்பி
தனது அதிருப்தியையும்
வெறுப்பையும் மறுப்பையும் வெளிப்படுத்தி
இந்நாளில்
திரும்பிடுது தன் இயல்புத்
தெளிவுக்கு இவ்வையம்!
ஆற்றல் அறிவு அபரிதத் திறமைகள்
நேற்றுச் சமைத்து…
நிலத்தில் முதலிடத்தை
பெற்றதற் காதாரப் பெரும் கவசம்
மகுடங்கள்
முற்றாய் நொருங்கிற்றூர் முற்றத்தில்!
உடைந்த துண்டை
ஒவ்வொன்றாய்ப் பொறுக்கி ஒட்டிப்
பழையவைபோல்
எவ்வாறு கவசம்
மகுடங்களைப் புனைந்து
எப்போது பழைய பீ ட்டை
மீட்டெடுக்கும் மனித வர்க்கம்?
எப்பவும் இப்பின்னடைவை
மறவாது நரர் சரிதம்!

04.05.2020

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply