எத்தனை இடர்களை எவரெவர் புரிந்தாலும்,
எத்தனை துன்பத்தை இற்றைவரை
மனுக்குலத்தோர்
செய்து அழித்தாலும்,
சிதைத்து முடித்தாலும்,
வையத் துயிர் உடலை வாட்டி வறுத்தாலும்,
கழிவுகளை நஞ்சை
காற்று கடல் நிலத்தில்
பொழிந்தே வதைத்தாலும்,
குண்டு போட்டெரித்தாலும்,
வளங்களை எல்லாம் வழித்துத் துடைத்தாலும்,
நல்லழகைச் சாய்த்து
நாகரீகம் செய்தாலும்,
எல்லாம் சகித்து…
எல்லாத்தையும் பொறுத்து…
கொல்லும் பழிவாங்கும் குணமற்று…
இடையறாது
மண்ணுக்குக் கருணை வரம் தந்து…
மனுக்குலத்தோர்
என்றும் உயிர்வாழ
இயற்கை இரங்கிடுது!
அன்பைப் பொழிந்து
அரவணைத் தருள்கிறது!
09.04.2020