தெய்வத்துக்கு இணை

நினைத்ததைச் செய்ய வல்ல அதிகாரம்
உனக்கு இருப்பதனால்
உன்விருப்பம் எல்லாமும்
ஈடேற்றிக் கொண்டுள்ளாய்!
‘இதைச்செய்வேன்’ எனமனது
கூறும் எதையுமே கொண்டுவந்து தந்துவிடும்
ஏவலர் கூட்டமும்
எடுபிடிகள் ஒத்துழைப்பும்
பூரணமாய் இருப்பதனால.;..
பொதுவாயே வெல்கிறாய்!
‘ஏன்இதனைச் செய்தாய்’
எனையுனையோ…சீடரையோ…
யாம்கேட்க முடியா யதார்த்தத்தால்
வாழ்ந்துள்ளாய்.
எதையும் செய்யவல்ல
அதிகாரத் தோரணையால்
தெய்வத்துக் கிணையெனவும்
புகழப் படுகின்றாய்.
தெய்வம்நீ என்றுன் சேவகர்வாய் செப்பிடுது!
‘தெய்வமா நீ’ என்று
தெய்வமுன்னைக் கேட்பதென்று?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply