சுயமழிப்பு

பகலைப் பகலாய் இருக்க விடாது …கரு
முகில்கள்;
பகலின் முகத்தை அவைமறைக்கும்!
இரவை இரவாய் இருக்க விடாது…ராவில்
எரியும் விளக்குகள்;
இரவியல்பெழில் சிதைக்கும்!
கடலைக் கடலாய் இருக்க விடாது…காற்று;
கடலில் அலைகிளப்பிக்
கலக்கி அடித்துவிடும்!
வளியை வளியாய் இருக்க விடாது…புகை
அளவற்ற தூசு; அதன்
ஆண்மையை மறுதலிக்கும்!
இவை…இடரை வேறு
எதனாலோ பெறும் எனினும்
இவைபோல அல்ல எம்நிலமை
என்றுமே
நரரை நரராய் இருக்க விடார் …வேறு
நரர்கள்…எப்படித்தான்
மனிதகுலம் ஈடேறும்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply