துயரிலூறிய காலம்

துயரில் அலைக்கழியும்,
துரதிஷ்டத்தில் நொந்திருக்கும்
வாழ்வொன்றா வாய்த்தது?
வசந்தம் இலையுதிரும்
காலமென ஆச்சு!
கனவுகளின் கோட்iடெயல்லாம்
நனவினில் ஓட்டை ஒழுக்கு குடிசையாச்சு!
‘இப்படித்தான் போகும் எதிர்காலம்’
எனும்கனவு
இப்படியேன் ஆச்சு?
இதெப் பழிவிளைவு?
மனதில் மலர்ந்த பசுமையெல்லாம்
பாலையாச்சு!
எட்ட இருந்தபோது
சிரித்த சுவர்க்கமெனை
தொட்டுத் தடவுகையில்
நரகம் எனப்புரிந்தது…என்
இதயத்தன் நாடிகளை பதட்டம் அறுத்தது..என்
நுரையீரல் நாளத்தைக் கோபவெக்கை
வெட்டிற்று.
சுமக்கும் துயரும்
தொடரும் நெருக்கடியும்
இமயமென என்மேல் இடிந்தது!
‘எதும் பிழையாய்ச்
செய்யான் எனக்கிறைவன்’
என்றின்றும் நம்புகிறேன்.
பொய்-மௌனம் மாறி
உண்மை அணைப்பதென்று?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply