திட்டமிடலின் யதார்த்தம்

இப்படி இப்படித்தான் பொழுதைக்
கழிப்பமென்றால்..
எப்படி எப்படியோ
பொழுது கரைந்துபோச்சு.
இப்படி இப்படியோர்
செயல்செய்யத் திட்டமிட்டால்..
எப்படி எப்படியோ
செயல்நடந்து முடிகிறது.
இப்படி இப்படித்தான் நனவைக் கடக்கநின்றால்..
எப்படி எப்படியோ
நனவென்னைக் கடந்திடுது.
இப்படி இப்படித்தான் வாழவேணும்
எனஎழுந்தால்..
எப்படி எப்படியோ வாழ்வு வழி மாறிடுது.
இப்படித்தான் நிகழ்காலம்
அமையுமென நம்பிநின்றால்..
எப்படியோ நிகழ்காலம்
எனைஇழுத்து ஓடிடுது.
‘எப்படியும் எதிர்காலம் அமையட்டும்’
முடிவுசெய்தேன்!
இப்போது… ‘திட்டமிடல்’
எனைக்கேலி செய்கிறது!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply