எழுதாதே கவிதைகளைத் தினமும்
என நீ சொன்னாய்.
சுவாசிக்க வேண்டாம் நீ தொடர்ந்து
எனச் சொன்ன
மாதிரி இருந்தது…
என் கவியே என் சுவாசம்!
சுவாசம் மறந்து என் உயிர் தொடர முடியாது!
கவிதை எழுதாமல்
யான் இருக்க முடியாது!
கவிதையை எடுத்து விட்டால்
நான் பின்னர் வெறும் கூடு!
என்சுவாசக் கவியுனக்குப் பிடிக்கவில்லை
என்றாலோ…
என்சுவாசக் கவியுனக்குப் புரியவில்லை
என்றாலோ…
என்மூச்சின் வாசம்
என்மூச்சின் வெப்பம்
உன்னை வதைத்தாலோ
உனக்கிடைஞ்சல் தந்தாலோ
என்சுவாசம் தனையே
நிறுத்தென்று றுரைப்பாயோ?
நான் வாழ்வேன்….
என்சுவாசம் தனைத் தவிர்க்கச் சொல்வாயா?
என்னைப் பிடிக்கலையா
என்கவி உவப்பிலையா
என்கவியைத் தாராள மாகத் தவிர்த்துப்போ!
என்சுவாசம் படாத இடம் திரும்பு!
இல்லையெனில்
என்னை மறுத்துவிட்டு உனக்கு ஏற்றவரின்
பின் செல்….
அதே உனக்கும் எனக்கும்
பொருத்தமென்பேன்!