மாற்றம்

திடீரென்று காற்று திசையினை மாற்றிற்று!
அடித்திங்கு நின்றகாற்று
அப்பக்கம் போயிற்று!
என்ன குழப்பம்?
எம்மீது ஏன் கோபம்?
என்னதான் காரணம்?
இதுவரை இதமாக
வீசிநின்ற காற்று விருட்டென்று
மறுபக்கம்
வீசி…உடல். உளமும்
வேர்க்கவிட்டேன் போயிற்று?
காலம் கிரகம் கோள் மாற்றம்,
கடவுளது
கோலம் குணத்தினிலே மாற்றம்,
தம்பாட்டில்
மானிடர்கள் மண்ணிலே
செய்யும் வகைமாற்றம்,
யாதிதற்குக் காரணம்?
யமனை அழைத்தபடி
காற்று திசை மாறிடுது!
எம்மூச்சைக் கவர்ந்த படி
காற்றெம்மைப் படிப்படியாய்க்
கழுவினிலா ஏற்றிடுது?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply