என்னுடன் கூட எழுந்து வரும் வெயில்.
எந்தன் பாதையைக் குளிர்த்தும் திடீர் மழை.
என் விழிக்கு வழி காட்டும் சுடர் ஒளி.
என் முகம் புத்துயிர்க்கத் தொடும் பனி.
என் சகபாடி யாகும் சுழல் காற்று.
என் துணை, சக பயணி எனும் முகில்.
என் வியர்வையை ஒற்றும் மர நிழல்.
இயற்கையே என்னோடு ஏன்தான் இனிப்பயம்?
இயற்கையோடு இணைந்து பிணைந்த பின்
இயற்கை சொல்லும் திசையில் நடந்த பின்
இயற்கை காட்டும் வழிகள் தெளிந்த பின்
இயற்கை யாக இயைந்து கலந்தபின்
இயற்கை வைத்த விதிகளை மீறாது
இயற்கை வாழ்வை உணர்ந்துமே வாழ்ந்தபின்
பயம் எதற்கடா? பிறப்பதன் அர்த்தத்தை
பயனைத் துய்க்கலாம் வாழ்க்கையை வெல்லடா!