இரவைக் கடுங்கோப்பி என்று பருகுகிறேன்!
எரியும் பகலைச்
சுடுபாலாய்க் குடிக்கின்றேன்!
நட்சத் திரங் கள்யான்
பானங்ககளில் கலக்கும்
கற்கண்டு;
நிலவு சூரியன் எனும் இரண்டு
வித பிஸ்கற் கடித்து
இரா பகலைச் சுவைக்கின்றேன்!
நிலவு பிஸ்கற் இரவுக் கோப்பிக்கு…
சூரியனாம்
வலுசுவை பிஸ்கற் பகற்பாலுக்கு என்று
கற்பனையின் உச்சம்
கண்டு களித்திடுவேன்!
அற்பன்
அடுத்த வேளைப் பிளேன் ரீ க்கு
ஏதும் பலகாரம் எடுத்துக் கடிப்பதற்கோ
இலாயக்கு அற்றோன்
எரியும் வயிறோடும்
களைத்துலர்ந்த தொண்டை நாக்கோடும்
அண்டத்தை
உருட்டியே கற்பனையில்
உண்டென் பசிதணிப்பேன்!