குதிரையேற்றம்

காமம் என்ற கறுப்புக் குதிரையோ
கட்டி அடக்க முடியாது துள்ளிடும்
சாமம் காலை மதியம் ஏன் மாலையும்
தலை நிமிர்த்தி முறுகித் திரிந்திடும்.
வேகம் கொள்ளும்.. எவ்வேளையும் பாய்ந்துமே
வீழ்ந்து தான் களைக்காது அலையும்..என்
தேகமாம் திடல் அதிரப் பறக்கும் அத்
திமிரின் குழம்பொலி திக்கை உலுக்கிடும்.

காட்டுக் குதிரையோ கைக்குள் பணியாது.
கட்டுப் படுத்த உடனே முடியாது.
நாட்டுக்குள் அதை நகர்த்தி…முயன்றதன்
முரட்டுக் குணத்தை நசுக்கியே சேணத்தை
பூட்டி…உருட்டிப் பலதரம் உன்னையே
புரட்டவும் அதில் ஏறிப் பழக்கினால்…
வாழ்க்கை முற்றும் விசுவாசி யாகிடும்.
வழித்துணையாகும்…வாழ்வை வளமாக்கம்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply