திருமறைக் கலா மன்றம் எனும் பெரும்
தேவ கலையகம் தன்னின் ‘பிதாமகர்’.
ஒரு அரை நூற்றாண்டாய்க் கலைப்பணி
உலகம் முற்றும் புரிந்த அருளாளர்.
அரங்கக் கலை, கூத்து, நாடகம் என்பதன்
அன்பர்; கலைஞர், ஆழ்ந்த இரசிகர்,ஆம்
கிறீஸ்த்து நாதரின் சேவகர், நேற்றைக்கும்
கேடில் தமிழ்க்கலைக் காக உழைத்தவர்!
பெரும் ‘கலைத் தூதர்’ என்று சிறந்தவர்.
பெருமை ஆயிரம் கொண்டும்…எளியராய்
நெருங்கி யாரொடும் அன்பைப் பொழிபவர்.
நிமிர்ந்து ஞானத் தெளிவுடன் வென்றவர்.
சரி சமானமாய் யாரையும் ஏற்றிடும்
தவ சிரேஷ்டர், தந்தை, அருட்பணி
மரிய சேவியர் அடிகள் மறைந்தராம்…
மறைந்த தவர்உடல்! மறையா தவர் புகழ்!!