பசுங் கொற்றக் குடைகள்!

வெண்மையைப் பசுமை கருமையாய்
மாற்றுகிற
விந்தை அறிவீரா?
வேறொன்றும் இல்லையப்பா…
வெள்ளொளியை உறுஞ்சும் பசும் இலைகள்
நிழலென்று
அள்ளிக் கருமைபூசும்
அதே மரத்தின் அடியெங்கும்!
இந்த நிறமாற்றம்
இந்த நிழல் மாற்றம்
சந்தோசம் மிக்கதல்ல;
தலையில் இலைப் பசும் மயிர்கள்..
வெள்ளை ஒளியின்
‘அர்த்தநாரி’ ஆன வெப்பம்
கொள்ளிவைக்கப்….பொசுங்கி,
கொடு வெயிலைச் சகித்தபடி,
வெப்பத்தை வடிகட்டி,
வெறும் ஒளியைக் குளிரூட்டி,
“அப்பப்பா” என்று ஆற
அண்டிவருவோர் விழிகள்
வேகா திருக்க
வெண் பகலைக் கருமையாக்கி,
நீழலினை நல்கும்
நிபுணத்துவம் மிகுந்த
மரங்கள் இராட்டில்….மண்ணிலென்று
ஈரமூறும்?
மரக்குடைகள் மண் ஆள
வெண்(பசும்) கொற்றக் குடைகளாகும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply