காலக் கணக்காய்வு

காலம் பிழைத்தால்நாம் போடும் கணக்கெல்லாம்
வீணாய்த் தவறாய்
வில்லங்க மாகத்தான்
போகும் இதைநாம் புரிந்துள்ளோம்.
என்றாலும்
காலம் சரியாயா? பிழையாயா?
உள்ளதென
யாருடைய ஜோசியத்தை
நம்பி முடிவெடுப்போம்?
முடிவெடுத்து நாங்கள்
முன்னோக்கிச் செல்கையிலும்
அட…காலக் கோலம் எவ்வாறு உள்ளதென
எப்படிக் கணிப்போம்?
இந்தக் கணிப்பினிலும்
தப்பு நடந்தாலோ தலைகீழாய்த்தான் வீழ்வோம்.
ஆகநாம் போடும்
அனைத்துக் கணக்குகளும்ளூ
ஆகநாம் செய்யும் அனைத்துக் கணிப்புகளும்
‘காலக் கணக்காய்வை’
மேவிவிட முடியாது
தானோ…?
யதார்த்தம் கண்முன் நிரூபிக்கும்
போதோ…அடிபட்டு
இதைப்புரியப் போகின்றோம்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply