என்வழியில்என்கவி!

காலத்தின்கோலமதை, கனவுகளைநனவுகளை,
கவிதைஎன்ற
தோல்வைத்துத்தைத்ததனைதுள்ளியேநடமாடத்
தொடர்ந்து செய்யும்
சீலனெனைஅற்பன்சிறுபொடியன்எனச்சொல்லிச்
சேர்ந்துதூற்றி
வீழ்த்திடலாம்என்றுதான்எண்ணுகிறீர்; நும்கனவு
விரைவில்சாயும்!

ஏன்நீயும்எழுதுகிறாய்? இப்படியாய்எழுதுகிறாய்?
இந்தச்சந்தம்
ஏன்? எதற்குஓசைநயம்ஏன்? என்றும்; கட்புலமே
இன்றைஆழும்
தான்..என்றும்சொல்லி; என்பேர்தன்னைத்தவிர்த்தபடி
சபையில்பேசி
ஈனங்கள்செய்வோர்க்குஎன்கவியேபதில்சொல்லும்
இவரைவெல்லும்!

ஓசைதரும்இன்பந்தான்உவமையிலாஇன்பமென்று
உணர்ந்துதேர்ந்து
‘நேர்நிரை’யும்ஆய்ந்துஅதில்நினைத்தபொருள்கோர்த்துஉயிர்
நிரப்பத்தேர்ந்து
ஆசையினால்என்கவிதைஆக்குகிறேன்! இரசிப்போர்கள்
அமர்ந்துகொள்க!
அதைவிரும்பார்…நீர்விரும்பும்படிஎழுதும்பலருமுண்டே…
அவர்பின்செல்க!

என்‘பாட்டை’ நானெழுதிஎன்விருப்பம்படிசெல்வேன்
என்றும்போல
நன்றென்போர்கேளுங்கள்…மற்றவர்கள்வழிவிடுங்கள்
நாளைகாலம்
என்கவிக்குத்தீர்ப்பெழுதும்!
எழுதாதேஇப்படியாய்
என்றுசொல்லும்
“மன்னவரேஉமைஏற்கேன்” என்கவியைஎன்வழியில்
வளர்ப்பேன்என்றும்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply