விழுதுகளாய்த்தாங்கு!

காலெடுத்துநீநடந்தெம்கண்முன்வந்துநில்-நெஞ்சின்
காயமாற்றயாதுதான்மருந்துகண்டுசொல்!
பாலெடுத்துஊட்டுஉயிரின்பசியைப்போக்கிச்செல்-என்றும்
பாசம்காட்டுதாயைப்போல்…இல்லாட்டிநாமோர்கல்!

காலமாற்றம்கோலமாற்றம்வந்துஆட்டுது-எங்கள்
கனவில்நனவில்மண்ணைஅள்ளிஅள்ளிவாட்டுது
கோளும்எம்குணம்நடத்தைதம்மைமாற்றுது? -நாமும்
குற்றம்செய்யத்தூண்டிதண்டனைவிதிக்குது!

நீதிநியாயம்நீர்த்துப்போனகாலமின்றடா-யாரும்
நெஞ்சில்உண்மைஅற்றுவாழும்பொய்யின்சேய்களா?
வேதம்தர்மம்கற்றுகேட்டிடாதுசெல்வமா?-நாமே
வில்லராவோம்எங்களுக்கு…மீட்பன்எங்கடா?

காரிருளாய்எம்மைநோக்கிதீமைசூழுது-கலி
காலம்தன்னிலேஅதர்மம்வாகைசூடுது
வேர்கள்வாடிகிளைஈடாடிவாழ்வுஅஞ்சுது-நீ
விழுதுகளாய்த்தாங்குஉடன்…ஏன்தவிர்ப்பது?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply