வாயினிலே பூட்டிவைத்த வார்த்தை வீசும் ஆயுதத்தை
நீ எப்போ துறந்து
நிராயுத பாணியாவாய்?
உன்னுடைய ஆயுதத்தை
ஒரேயடியாய்த் துறப்பதிலே
உன்ஐயம் உள்ள உனதச்சம் நானறிவேன்.
ஏல்லாத்தையும் வேண்டாம்…
இரவைக் கூட்டை எனினும்நீ
வெறிதாக்கி விட்டு அணிவகுக்கும் சிப்பாய்போல்
சிரித்தலொரு கஷ்டமன்றே…
சீவியம் முழுதும்நீ
தோட்டா நிரப்பி எதற்கும் தயாரான
வேட்டையனைப் போல
வீதிகளிற் திரிகின்றாய்.
ஏன்வாயில் ஆயுதங்கள் இல்லைளூ
நீ சுட்டால்
என்னையே காக்க எனதுடலில் கவசமில்லை.
என்செய்ய ஏலும் என்னாலே?
இவைவாங்க
என்னாலா முடியும் இயலாதே!
வேறுஒரு
வாயினிலே ஆயுதத்தை வைத்தவனை
அடித்துவீழ்த்தி
ஆம் அவனின் ஆயுதத்தை அபகரித்து…
என்வாயில்
பூட்டுவது ஒன்றே
உன்னைச் சமாளிக்க
ஏற்றவழி என்கின்றேன்
எவன்வருவான் தேடுகிறேன்.