துரத்தும் பசிபோக்கத்
தூண்டிலினை வீசுகிறான்….
துரதிஷ்டம் பலதடவை தோன்றி
அகன்ற நொடி
துரத்தும் பசிபோக்க
தூண்டிலில் மீன் பரிசாச்சு!
துரத்தும் பசியால்
துடித்தபடி அலைந்து வந்து
துரதிஷ்டம் தொட்டநொடி…
தூண்டிலிலே சிக்கிற்று
மீன் அங்கு!
பசியை விட மிகக் கொடிய ‘மரணவலி’,
ஏங்கிய வாயில் தூண்டில் முள் துளைத்த
காய நோவு,
என்பவையும் உள்ளதென…
நீரை விட்டு வெளிவந்தால்
என்ன கதி ஆகுமென…
‘அது’ முதன் முதல் உணரும்
துன்பக் கணத்தில் சா
அதற்குப் பரிசாச்சு!