மகிழ்வு

பம்பரமாய்ச்சுற்றிடுதுபனையும்பெருவேம்பும்!
இங்கடிக்கும்வைகாசிக்காற்றென்னும்
சாட்டையினால்
பம்பரமாய்ச்சுற்றுது
பனையும்பெருவேம்பும்!
தலைச்சுற்றுவந்ததெனத்தடுமாறும்
மரக்கிளையைக்
கலைத்துப்பேன்பார்க்கும்கனிகைபோல்
காற்று…பூவை
உலுப்பிஉதிர்க்கிறது!
உதிரும்காய், கனி, முதிர்ந்த
இலைகளிடம்எடுத்து
எழிலோடுசுவைவாசம்
தருகிறதுஊருக்கு!
தாவரவிளக்குமாறால்
பெருக்கிடும்காற்றுபெருமணலை!
வேம்புதன்
பூக்களைஎன்மேலும்போட்டு
ஆசீர்வதிக்கிறது!
தீக்கனலாய்த்தகிக்கும்திசைகளிலே
வரும்காற்றின்
பஞ்சுக்கரங்கள்படக்
குளிர்ப்பூமலர்கிறது!
கொஞ்சும்குயிற்காற்றின்குரலினிமை
கேட்டபடி
நிற்கின்றவேம்பின்நிழலின்கீழ்
என்னுடைய
முற்றத்தில்வேப்பம்பூப்
பாய்விரிப்பில்தூங்கிவிட்டேன்.
மின்விசிறி, குளிரூட்டி, தராத
ஆழ்ந்ததூக்கம்
என்வாழ்வில்மீண்டுமின்றுசித்தித்தது;
மகிழ்ந்தேன்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.