இன்றுவரவில்லைஎன்று
வரிசையிலே
நின்றுகளைத்து,
நிதானம்இழந்து, பல
சண்டைபிடித்து,
தாமதம்ஆனாலும்
கொஞ்சம்எரிபொருளைக்கொண்டு
திரும்புகிறோம்!
இந்தஇடரைஎண்ண
மனம்பற்றி
வெந்துகருகிடுது!
விரைவில்..சிலநாளில்…
“வந்துவிடும்” என்றநம்பிக்கையோடுதான்
அந்தரங்கள்பட்டும்
வரிசைகளிற்தொலைகின்றோம்!
“இனிமேல்வருவதற்குஇல்லை”
எனும்நிலமை
கனவிலன்றி- நனவில்வரும்
காலம்கடந்துஓர்நாள்.
ஏனென்றால்…
இந்தஎரிபொருளின்பெற்றோராய்
ஆழப்புதைந்தமசகெண்ணை
ஆம்…ஓரிரண்டு
நூற்றாண்டினுக்குள்
உலகில்இருந்துமுற்றாய்
ஒற்றிஉறுஞ்சிவிடப்பட்டுவிடும்… அதற்குப்
பின்னர்புவியிலுள்ள
எண்ணற்றகோடிகோடி
சின்னன்பெரியஇரகவாகனங்கள்
அனைத்தும்தம்
மூச்சைவிடுவதற்கும்
மூலபொருட்களின்றி
மீட்சியற்றுப்போகும்!
வெறும்இரும்புக்கூடுகளாய்
காட்சிப்பொருட்களாகும்!
“விரைவில்வரவுள்ள..,
இந்தஉலகையே
இயங்காமற்செய்யவல்ல..,
இந்தநிலையைஎதிர்கொள்ளஎன்னமாற்று?
எந்தப்பொருளைபிரதியீடாய்க்
கொண்டுவரல்?”
என்றஎதும்திட்டம்…
இதுபற்றிஆராச்சி…
பண்ணி
இன்றைக்கேபரீட்சித்துப்பாராமல்;
இன்றைஇடரின்அனுபவத்தைக்
கொண்டு…இனி
என்றும்எரிசக்திமூலம்
முடிவுறாமல்
மண்ணில்கிடைக்கவைக்க;
மறுபடிபுதுப்பிக்க
வொண்ணாஎரிபொருட்குமாற்றாக;
என்றென்றும்
மங்காதசக்திமூலம்
மலிவாகவலுவாக
எங்களுக்குவேணும்…
எதுவழிதான்?
எவர்காண்போம்?