இரத்த பந்தம்

உயிர்பிரிந்து போன,
மரணம் நடந்துவந்த,
சிறுவழியாய் ரத்தம் வழிந்துகாய்ந்த ஒருகீற்று…
வெறிச்சோடிப் போன
தெருவழியே கிடக்குதிப்போ!
அருகில் வெறுஞ்சடமாய் ஆள்
அரவம் தொலைந்துபோச்சு.
எங்கே உயிர்பிரிந்து போயிருக்கும்?
படிந்துடலில்
தங்கிய மரணம்
என்றுவரை தரித்திருக்கும்?
உயிரினது சாட்சியாக உள்ளோடும்
குருதியிப்போ
மரணத்தின் சாட்சியாயா
வெளிவந் துறைந்திருக்கும்?
குருதிக்கும் உயிர்ப்புக்கும்,
குருதிக்கும் இறப்புக்கும்,
‘இருக்கின்ற பந்தமே’ புரியாப் புதிராக
இயற்கையிற் தொடர்ந்திருக்கும்!
வரலாற்றின் வழிநெடுக
பெருகிய குருதியே இயற்கையைப் போஷpத்து
உரமூட்டி விட்டதுவோ..?
உள்ளுணர்வு கேள்விகேட்கும்.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply