காலம்

கனவுகளைக் காவு எடுக்கிறது
கொடுங்காலம்.
கனவுகள் அடைகாக்கப் பட்டுக்
கவனமாக
“நனவுகளின் குஞ்சுகள்
நாளை பொரிக்குமென”
மனங்களெலாம் நம்பி மகிழ்ந்திருக்க
திடீரென்று
‘அடையைக்’ கலைத்து அழித்துக்
கனவுகளை
அடித்துச் சிதைக்கிறது
அணுகும் துயர்க்காலம்.
ஆதலால் நாமும்
அன்றாட யதார்த்தத்தின்
கோரப் பிடிக்குள் குதறுண்டு
நாளையினைத்
தூர திருஷ்டியாலும் தொட்டுப்
பலன் பெறவும்
ஏலாது…துரத்திடுது
இன்றை நிகழ்காலம் !

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.