அறிவோன்

இறைவன் அறிவான் எவன் பொய்யன் என்பதனை.
இறைவன் அறிவான் எவன் மெய்யன் என்பதனை.
இறைவன் அறிவான் எவன் அழுக்கன் என்பதனை.
இறைவன் அறிவான் எவன் தூயன் என்பதனை.
இறைவன் அறிவான் எவன் நண்பன் என்பதனை.
இறைவன் அறிவான் எவன் பகைவன் என்பதனை.
இறைவன் அறிவான் எவன் நடிகன் என்பதனை.
இறைவன் அறிவான் எவன் இயல்போன் என்பதனை.
இறைவன் அறிவான் எவன் கள்வன் என்பதனை.
இறைவன் அறிவான் எவன் காப்போன் என்பதனை.
இறைவன் அறிவான் எவன் போலி என்பதனை.
இறைவன் அறிவான் எவன் சுயம்பு என்பதனை.
இறைவன் அறிவான் எவன் தியாகி என்பதனை.
இறைவன் அறிவான் எவன் துரோகி என்பதனை.
இறைவன் அறிவான் உள்ள வேட தாரியினை.
இறைவன் அறிவான் உண்மை பக்தன், தொண்டனினை.
ஏனென்றால்….
இறைவன் எல்லோர் உளங்களிலும்
தான் விரும்பிக் குடியிருப்போன்.
அகங்களைத் தரிசிப்போன்.
யார் எவர்க்கும் சாராமல்
மன நிலமைகளை அறிவோன்.
யார்தான் விசுவாசி?,
யார் சுயநலவாதி?,
யார் நல்லோர்?, யார்தீயர்?,
என மெய்யாய்த் தெரிந்துணர்ந்து
யாரை விரும்புவது,
யாரைத் தவிர்ப்பது,
யாரை வளர்ப்பது,
யாரைத் தடுப்பது,
யார்எவரை எங்கு வைப்பதென
நடுநிலையாய்த்
தேறும் பெரியோன்!
தீரப்பெவர்க்கும் உரைக்க வல்லோன்!
இறைவன் அறிவான் எவன் பொய்யன் என்பதனை…
இறைவன் அறிவான் எவன் மெய்யன் என்பதனை….

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.