விழிப்பறவை வளர்ப்போர்.

இமைச்சிறகு இரண்டடித்துப்… பறக்கிறது விழிப்பறவை!
அது எங்கும் திரிகிறது!
அட…பகலில், மின்குமிழ்கள்
ஒளிரும் இரவுகளில்,
ஊறும் அழகுகளை
இரசித்தபடி செல்கிறது!
எங்கோ இரை கண்டு
கொத்திப் பிடித்துக் குவியும்
பழம், விதைகள்
தேவை பசிக்கேற்ப தின்று களித்திடுது!
அது தன் வழிகளிலே…
அவலம் துயர்களையும்,
கொடுமை,
உயிரெடுப்பு கொலைகளையும்,
கண்டவாறு
அடிக்கடி துயருள் அமிழ்கிறது!
இமைச்சிறகு
இருந்தும் பறக்க இயலாக்
குருடான
விழிப்பறவை கொண்டவர்கள்
விரியும் அழகுகளைச்
சுவைக்கக் கொடுத்துவைக்காத்
துயரிடையும்
கொடுமைகளைக்
காணாத நிம்மதியில்…
காலம் கடத்துகிறார்!
கோடி விழிப்பறவை கொண்டவர்கள்
எல்லோரும்
அவற்றால் இவ் அவனிக்கு
என்ன நன்மை களைச் செய்தார்?
அவற்றை…
மலட்டுப் பறவைகளாய்
வைத்துள்ளார்!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.