நிரந்தரம்

இரவு நிரந்தரம் இல்லை.
பகலுந்தான்
நிரந்தரம் இல்லை.
நிலவிரவு நிலைக்கவேண்டும்
என்று நினைத்தாலோ…
எழிற்பகலே நீளவேண்டும்
என்று தவித்தாலோ…
எதுவும் நடக்காது!
அதுபோற்தான் துன்பமும், அழிவுகளும்;
அவைகள்
எதுவும் நிரந்தரம் இல்லை.
மகிழ்வுகளும்,
சுகமும், வெற்றிகளும்,
தொடரல் நிரந் தரமில்லை.
ஏழ்மையும், செல்வத்தோ டிருப்பதுவும்,
இலாபநட்டம்
வாய்ப்பதும்,
கோடை வசந்தமதும்,
மாரியதும்,
வரட்சியும், வெள்ளமும்,
வரவும், செலவுகளும்,
நிரந்தரமே இல்லை!
இயற்கை நிதம் மாறும்
‘நிரந்தரர்கள்’ இல்லை!
எதுவும் நிரந்தரமாய்
இல்லை… என ஆனதன்பின்
ஏன் மகிழ்வு, சோகமென
துள்ளுகிறோம்?
துவளுகிறோம்?
ஏன் எமக்கு விளங்குதில்லை?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.