இன்று…

‘இந்த நேரத்தில் ……தான்’.
‘சனாதிபதி……தான்’.
‘வெல்லும்……..’
‘தேசமே பயப்படாதே’.
‘…….. விரட்டுவோம்’.
எங்கள் தோழர்…..,
‘Im ready, Are you ready?’
இப்படி இப்படியாய்
தேர்தற் திருவிழா கொடியேறும்
சேதி வந்த
ஓரிரு நாட்களிலே,
ஊரின் மதில்களிலே,
ஏழெட்டுச் சுவரொட்டிக் கோலம்;
இன்னும் வரலாம் காண்
நூறு வேறு வர்ணஜாலம்!
நூர்ந்த சிதைமேட்டில்
தோன்றும் எல்லைச் சுவர்களில்
‘சேறடித்து’ விளையாடும்
சுவரொட்டிப் போட்டிகளுள்….
சுவரின் ‘கொலாஜ்’ சித்திரத்துள்…
அவலமாய் மறைகிறது….
அன்று ‘ஜூலைக் கலவரத்தின்’
படுகொலையை நினைவுகூர்ந்து
அஞ்சலித்த சுவரொட்டி!
அடிபிடியும் இதற்குள்…இங்கும்
வேட்பாளர்களைத் தேடி!

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.