தெரிதல்

சகோதரம் எனப் ‘போட்டாய்’.
அயலான், உறவுகள்,
சகநட்பு, உனக்குத் தெரிந்த முகம்,
நினது
சாதி, குலம், சமூகம், சமயம், நிறம், இனமும்,
தான் என்றும் வாக்கிட்டாய்.
பரம்பரையாய் யாமென்றும்
ஓர்கட்சி என்ற பெருமைக்கும்
வாக்களித்தாய்.
வரலாற்றை மாற்றி…
மண்ணை நிமிர்த்தவல்ல…
ஒருவன் திறமையாளன்,
உண்மையான சேவையாளன்,
இவன் செய்வான் நல்லன்,
இவன் விசயம் தெரிந்த வல்லன்,
இவன் நேர்மையாளன், என
அறிந்து எப்போ வாக்களிப்பாய்?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.