“அடக்கமுடையார்
அறிவிலர் என்று கருதிக்
கடக்கக்
கருத வேண்டாம்”
இக் கருத்தை வலியுறுத்த
இப் ஃபெங்காலை
விட வேறேதும்
வேண்டுமா??
வங்காளவிரிகுடாவில் பிறந்து
வடக்கை நோக்கித் தவளும் -ஒரு
குழந்தை, தனது அழுகையால்
குளங்களை நிறைத்து -தன்
வீம்புச் செயல்களால்
வீதியில் மரங்களை வீழ்த்தி
மழை என்ற தனது
மழலை மொழி பேசி
இடியுடன் கூடிய இருட்டான இரவை
இங்கிருப்போர் இரசிக்கும் பொழுதும்
இயற்கையால்
இயலாதது என்ன
என எமை
எண்ணிப் பார்க்க வைத்தும்
இயல்பான நடையிலமைந்த
‘இந்த இரவு’ என்ற கவியையும்
அமைப்பதற்கு வாய்ப்பழித்த
அமைதிப்புயலான ஃபெங்கால்
நீ, வரலாற்றில் என்றும்
நீங்காத இடம்பிடிப்பாய்.
இம்முறை,
புயலிற்குப் பிந்திய அமைதியைக் காணோம் மாறாக
புயலே அமைதியாக வருவதைக் காண்கிறோம்.
ஜெ.ஆருத்ரா
28/11/2024
(மூத்த புதல்வி யாத்த கவிதை)