பிரதேச மகளிர் தின கீதம்

பல்லவி

மகளிர் தினம் – இன்று
மகளிர் தினம்
‘பச்சிலைப் பள்ளியில்’ மகளிர் தினம்!
மகிமைத் தினம் – பெண்மை
மகிமை சொல்லும்
மண்ணினில் இது புது விதிபடைக்கும்!

சரணங்கள்

குடும்பத்திற்காய்ப் பெண்கள் உழைத்திடுவார் – தங்கள்
குறைகளை மறந்துமே முயன்றிடுவார்.
அடுப்படிகளில் அன்று அடைந்திருந்தார் -இன்று
அறிவியல், தொழில்களில் ஜெயித்தொளிர்வார். (மகளிர்…)

அடங்கியே கிடந்திடும் நிலையின்றில்லை -வேலை
அனைத்திலும் மகளிரே ‘நிமிரும் மலை’
மடமைகள் சுடும் அவர் மனவலிமை -மாதர்
வரம் தர உயரும் ஆடவரின் ‘தலை’
(மகளிர்…)

பெண்புகழ் பாடிடும் கவி, இசையும் – அவள்
பேரெழுச்சி காணும் வழிவகையும்
மண்ணை நிமிர்த்திட அவர் துணையும் – தேர்ந்து
மாற்றங்கள் கொண்டரும் இந்தத்தினம்! ( மகளிர்….)

பச்சிலைப் பள்ளிப் பெண்களின் திறனை -அவர்
பணிகளை, சாதனை, பெருமைகளை
மெச்சியே ‘பச்சிலைப் பெண்’ விருதை – தந்தும்
மகளிரைப் போற்றுதல் நம் கடமை
( மகளிர்…)