கண்ணா லுனைக் காண எனக்
கண்ணீருடன் கதறும்…
கையற் றவர் கால ற்றவர்
கதையை மறந்தாயோ?
புண்பட்டவர் நொந்திற்றவர்
புதிரை அவிழ்க்காயோ?
பொன்னள்ளியே தாறோர்க்கெனில்
பொருள் நூறருள் வாயோ?
என்னா கிடும் போதும் நினை
எண்ணி இருப் போர்கள்,
“என்றோ அருள் வாய்” என்றுமே
ஏங்கிக் கிடப் போர்கள்,
“உன்னால் பலன் தோன்றும்” எனும்
ஊனம் மிகுந் தோர்கள்,
உன்னன் பர்கள் சோர…எவர்க்
குதவ விரைவாய் சொல்?
உண்மை அடியார்கட் குயிர்
ஊட்டு… பிணி சுடு…வா!
உந்தன் நிழல் இலையென் பவர்
உணர…வெயில் கொடடா!
விண்ணர் எனத் தமையெண் ணிடும்
வீணர் விழ…தொடடா!
வேலால் புது விதி எம் தலை
மீதும் எழு திடடா!