விடியலின் வாசம்

விடிந்தும் விடியாத
பனிமூட்டம் விலகாத
குளிரின் வருடல் குறையாப் புதுக்காலை.
இரவின் மழையீரம்
நிலத்தை இழக்கிற்று.
பரபரப்பு இன்றிப் படர்ந்த செடிகொடியில்
பூக்களொவொ ன்றாய்
முகையவிழத் தொடங்கிற்று.
தூக்கம் துரத்தித்
தொடர்ந்தேகும் புள்ளினங்கள்,
புத்துணர்ச்சி பொங்கப் புரண்டோடும் சிற்றருவி,
எத்திக்கும் விடிவின்
அர்த்தம் இயம்பிடுது.
புற்கள் பனித்துளியைப்
பூத்துச் சிரித்திருக்க
முற்றச் செடிகொடிகள் மழைகுளித்து
ஈரமுடி
காயவைக்கும் பெண்களெனக் காற்றாட
எங்கெங்கு
பார்த்தாலும் பசுமை
படிந்து மனம்மயக்க
விடிந்தும் விடியாமல்,
பனிமூட்டம் விலகாமல்,
தொடரும் விடியலிலோர் தூய்மை
மலர்ந்ததிலே
பரவுகிற வாசத்தில்
வரும்பகலின் துர்மணத்தை
முறியடிக்கும் சக்தி
முகிழ்ந்துகொண் டிருக்கிறது.

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply