அமைதி வந்து அமர்ந்த தென்று
ஆடிப்பாடித் துள்ளினீர்.
அருளும் திருவும் அனைத்துச் சுகமும்
அமையும் என்று சொல்கிறீர்.
எமனுக் கிங்கு இனிமேல் வேலை
எதுவுமில்லை என்கிறீர்.
எமது வாழ்க்கை குறைந்த தில்லை
எவர்க்கும் என்று பொங்கினீர்.
ஆழும் வர்க்கம் வாழும் வாழ்வு
நாமும் வாழ்வம் என்றும்..நம்
ஆட்சி தன்னில் யாவும் காண்பம்
ஆற்புதங்கள் செய்குவம்.
நாளை எங்கள் காலம் என்றீர்!
நம்பச் சொன்னீர் ஆயினும்
நாம் கொலைக்கும் களவு கட்கும்
அஞ்சிக் கண்விழிக்கிறம்.