கனவுகளில் வந்து கவிதைகளைத் தந்து
கவிஞனென என்னை மாற்றும்,
கருணை நிறைசக்தி கடவுள் நிகர்சக்தி
கவின் எனில் என்றும் சேர்க்கும்.
மனதில் தடுமாற்றம் வரவும் தடுத்தாண்டு
வரங்கள் எனக்கென்று காட்டும்.
வழியில் வருகின்ற தடைகள் தகர்த்தென்னை
வருடி அழியாமற் காக்கும்.
எவர்க்கும் பணியாமல் எவர்க்கும் குனியாமல்
இறுதிவரை தர்மம் நியாயம்
இவையை மதித்தூர்க்கு இனிய வழிகாட்டும்
இளைஞன்இவன் எல்லை வானம்.
புவியில் பலபேர்கள் உதித்து மறைவார்கள்
பொலியும்…கவிஞர்கள் ஞானம்.
புதிரென் றிருந்தாலும் பொருளற் றிருந்தாலும்
புதுமையென வாழ்வேன் நானும்.