“உப்புக் காற்றில் மலர்ந்தமலர்கள்”என்றகவிதைத் தொகுதியோடுகவிதைப்பரப்பில் நுழைந்த இளம் கவிதாயினி செல்வி.அ.கயல்விழிஅவர்களின் இரண்டாவது கவிதைத் தொகுதி “தேடலின் சாரலாக” வெளிவந்துள்ளது.சிறிதும் பெரிதுமான சுமார் ஐம்பதுகவிதைகள் இத் தொகுதியில் அடங்குகின்றன.
தமிழ்க் கவிதைப் பாரம்பரியம் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளைகொண்டிருப்பினும்,அதில் உலக கவிதை வரலாற்றில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடியபெரும் கவிஞர்கள் தோன்றியிருப்பினும் ஒப்பீட்டளவில் பெண் கவிதாயினிகள் குறைவாக வே காணப்படுகின்றனர். ஒளவையார், காரைக்காலம்மையார், ஆண்டாள் போன்ற,ஆண் கவிஞர்களுக்குசற்றும் சளைக்காத பெண் கவிதாயினிகளைக் கொண்டதுஎமதுதமிழ்க் கவிதைப் பாரம்பரியம்.எனினும் இடைப்பட்டகாலத்தில் தமிழ் கவிதாயினிகளுக்கு தட்டுப்பாடு நிலவியது என்பது உண்மை. எனினும் நவீன கவிதை தோற்றம் பெற்ற இந் நூற்றாண்டின் ஐம்பதுகளுக்குப் பின் பலமுக்கியமானபெண் கவிஞர்கள் தமிழ்க் கவிதைக்குபங்களிப்புசெய்திருக்கிறார்கள்.எண்பதுகளின் பின் தமிழ் நாட்டில் காணப்பட்ட பெண் கவிதாயினிகள்பலர். சல்மா,மாலதிமைத்ரி,சுகிர்தராணி,குட்டிரேவதி,தமிழச்சிதங்கபாண்டியன் என்போர் முக்கியமானவர்கள். ஈழத்தில் எண்பதுகளில் ஏற்பட்டயுத்த சூழலின் பின் கிளர்ந்தெழுந்து கவிதைபாடிய பெண் கவிதாயினிகள் அநேகர்.சிவரமணி,ஆழியாள்,ஊர்வசி,ஆதிலட்சுமிசிவகுமார்,வானதி,அனார்,பஹீமா ஜகான்,தமிழ்நதி,பெண்ணியா,தாட்சாயினிபோன்றோர் முக்கியமானவர்கள். இவை முழுமையான பட்டியல்கள் அல்ல.
இந்ததொடரில் இளையகவியாக,புதியகவியாகமிளிரத் தொடங்கியிருக்கிறார் இன்பர்சிட்டியைதன் சொந்த இடமாக கொண்ட செல்வி கயல்விழி. கயல்விழியின் கவிதைகள் தான் சார்ந்தஊரின்,சூழலின்,வாழ்வின்,குடும்பத்தின் குறுக்கு வெட்டு முகங்களாக வெளிக்கிளம்பியிருக்கின்றன.க விதையின் ஆரம்பநிலைக் கவிதைகள் என்ற படியை கடக்க முயற்சி செய்வனவாக அமைகின்றன.எளிமையும் இயல்பும் அதிகம் சோடனைகள் ஆடம்பரங்கள் அற்றபோதிலும் சொல்லவந்ததைவாசகர்களுக்குபுரியவைத்துஅவர்களைஅக்கவிதையுடன் ஒன்றவைக்கும் தன்மையுடனும் இவரின் கவிதைகள் விளங்குகின்றன.
கைத் தொலைபேசியைமையமாகவைத்து
“மாண்புமிகுதாயிடம்
மாற்றானின் மனைவியிடம்
தமிழ்ச் சகோதரியிடம்
மாண்டுபோனதுநம்
காதலும் கலாசாரமும்”
என்றஅடிகள் எமதுயதார்த்தநிலையைபடம்பிடித்துக் காட்டுகின்றன.
“கணவனின் வரவை
கடலில் தேடுவாள்
பிள்ளையின் தேவையை
பிடிப்போடுசெய்வாள்
உறவின் பாசத்தை
உயிராய் மதிப்பாள்
அயலவர் அன்பையும்
அழகாகசேர்ப்பாள்-தன்
துன்பத்தைமட்டும்
கடலோசையில் கரைப்பாள் மௌனமாக…..
அவள்தான் நம்மவள்”
என்றவரிகள் ஒருகடலோரச் சமூகபெண்ணின் குறியீடாகமட்டும் நின்றுவிடவில்லைஎனலாம்.
“அழும்போதுசுவைக்கிறேன்
கண்ணீரோடுஎன் கனவையும்,
அதைமறைக்கவும் நினைக்கிறேன்
புன்னகைத்துபொய்யாக”என்றசிறியகவிதையும்
“என்
வருடிச் செல்லும்
வாழ்க்கைச் சாரலில்
என்னை
திருடிக் கொண்டதுஎது? ”
என்றவரிகளும் இவர் கவிதையில் பயன்படுத்தும் நுட்பத்தைகாட்டபதச்சோறுகளாகவிளங்குகின்றன.
“பெற்றவளைதுறந்து
காதல் கொண்டாள் வாலிபனை,
காதலைமறந்து
கைப்பிடித்தாள் ஒருவனை
கணவனைவிட்டு
ஓடிச் சென்றாள் மாற்றானோடு,
இவளைஏற்றுங்கள் கழுமரத்தில்….
தானாகவளரும்
தமிழ்க் கலாசாரம்”
என்றகவிதையில் பாரதிகண்டபுதுமைப் பெண்ணாக,புயலாகஆவேசம் கொள்ளும் பூவானகவிதாயினியைக்காணமுடிகின்றது.
இன்றும் மாறாதசமூகத்துயரங்களையும் இவரின் கவிதைகள் நாசுக்காக தொட்டுக்காட்டுகின்றன.சமூக ஒற்றுமை என்பது வெறும் கனாவாக,கானல் நீராக இருப்பதனை இவர் கண்டு கலங்குகின்றார்.தன் ஆற்றாமையை இவ்வாறுபகிர்கிறார்.
“கடலோரம் வீசும் காற்று
வயலோரம் வீசாதா?
வயலோரம் விளையும் பயிர்
கடலோரம் சாயாதா?
கடலும் வயலும்
சேர்ந்தாலும்
கடலவரும் வயலவரும்
சேர்வதெப்போது”என்பது இவரின் ஆதங்கம்.
கவிதைக்குரிய மென்மை,உணர்வூறியதன்மை,சமூகஆவேசம் என்பன இவரதுகவிதைகளில் இயல்பாக பொலிகின்றன. பலதரப்பட்ட கவிதைகளை பயில்வது இவரின் கவிதாமேன்மையைமேலும் வளர்த்தெடுக்கும் என்றால் மிகையில்லை.எமது தமிழ் பாரம்பரிய கவிதைகளையும், கவிதை வடிவங்களையும், உத்திகளையும், நவீனகவிதைகளின் நுட்பங்களையும் புரிந்துகொண்டு தனது கவிதையை இன்னும் இவர் மெருகேற்றவேண்டும். நல்லகவிதைகளை, பல்வேறுவகையான கவிதைகளை வாசித்தல், பயிலுதல் இவரின் கவிதை ஆளுமையை மேலும் வளப்படுத்தும். இன்றைய நவீன பெண் கவிஞர்களின் கவிதை அனுபவங்களையும் இவர் அறியமுயல வேண்டும். இவ்வாறு செயற்படின் ஈழத்துத் தமிழ்க் கவிதை வரலாற்றில் ஓர் இடத்தைபெறும் தகுதி இவருக்கும் சாத்தியமாகும்.