நேற்றைய காற்று

நேற்றைய காற்று இன்றைக் கிருக்கிறதா?
நேற்றைய காற்று
நேற்றோடே போயிற்றா?
நேற்றைய காற்றின் நிழலோ..அதன்சுவடோ…
நேற்றைய காற்றின் ஸ்பரிச நினைவுகளோ…
இன்றிருக்கும் காற்றில் இருக்கிறதா?
இன்றுவரும்
தென்றலது நேற்றைத் தென்றலதன் புத்திரியா?
நேற்றைய காற்றில்
நிறைந்த இளங்குளமை
காற்றிலில்லை இன்றுள: இது
நேற்றின் கிழவடிவா?
நேற்றடித்த காற்றின் நினைவுச் சுவடுகளில்
நேற்றடித்த காற்று
நடந்த தடங்களதில்
இன்றுவரும் காற்று எழுகிறதா?
வழிகாட்டி
அதைத்தேடிக்…கற்பதற்கு ‘இன்றையது’ செல்கிறதா?
நேற்றைய காற்றும்
நிகழ்வுகளும் நினைவுகளும்
வீற்றிருக்கும் உளம் பொங்கி மேனி மலராதா?
ஒன்றேதான் காற்றென்றால்…
‘உது’ சாகா வரம்பெற்ற
ஓன்றுளூ என முடிவு செய்தல் சரிதானா?
நேற்றைய காற்றின் றிருக்கிறதா?
தெரியலைதான்!
நேற்றைய காற்றின் நினைவுகளும்
இன்றுவரும்
காற்றை சுவாரஸ்யம் ஆக்குதென்பேன்…
இதுதவறா?

This entry was posted in கவிதைகள். Bookmark the permalink.

Leave a Reply