வழமை

சின்னத் துளி…
முகிலின் சிறையுடைத்து வீழ்ந்தாலெம்
மண்சிலிர்க்கும்;
அதனின் மனம் குளிர்ந்து
உறங்குநிலை
கொண்டு நிலத்துள் கொடுகிக் கிடந்த விதை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

என் பெருமை!

மலடியல்ல எங்களின் மாதா!
என்றென்றும்
கலைகளெலாம் தேர்ந்த
கவிக்குழந்தைகள் தம்மை
அன்றிருந்து இன்றுவரை
அடுத்தடுத்துப் பெற்றபடி…, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கடவுளுக்கு நிகர்!

கால நதியோரம் கால்கள் விளையாடும்
காயம் அதில் மூழ்கி முழுகும்.
காய்ந்து, உடல்மேலே காணும் கழிவெல்லாம்
கழுவிவிட நெஞ்சு முயலும்.
தோலில் படிந்தூறும் தோசம் தொலைத்தோட்டி
தூய்மை மனமென்று அடையும்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உன்னை உணர்!

காலகாலமாய்க் கல்லாய்க் கிடந்தவா!
கண்ணை மூடியே என்றும் துயின்றவா!
சீலம் யாதெனத் தேறா தலைந்தவா!
தேசு யாவும் மறந்து உலைந்தவா!
சாலவே பெரும் பேர் புகழ் கொண்டதோர்
சந்ததி அதன் விழுதென வந்தும்…உன் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காப்பு வழி?

என்ன கொடுமையிது? -எங்கள்
எட்டுத் திசையும் நலிந்து துவண்டு
துன்பத்தில் தோய்கிறது! -அதன்
சுவாசம் நொடிந்து திணறிடுது!
புன்னகை தோற்றலைந்து -பேய்கள்
புகுந்ததாய் முகங்கள் இருண்டுறைந்து Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

முன் காணாக் கோலம்!

மாசற விளக்கு ஏற்றி
மாலை,மாவிலை,பூ, சூட்டி
வாசலில் கும்பம் நாட்டி
வரவேற்புப் பாக்கள் மீட்டி
ஆசையாய் வடை,கற்கண்டு,
அவல், சுண்டல் படைத்து நீட்டி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சடங்கு

மாரடைப்பினால் மாண்டான் எனும் செய்தி
வந்ததெம் உயிர் வெந்து துடித்தது!
ஊர் உறவுகள் கூடிக் குவிவதும்…
ஒப்பாரிக் கென்று பெண்கள் திரள்வதும்…
வேறு ஆட்கள்….கிரிகை, சாமான், ஐயர்,
பெட்டி எடுத்தல், வெடி, பறை, வாழைகள், Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காத்துள்ளோம்!

உன்னையே நம்பித் தானே
உடல், உயிர் வாழு கின்றோம்!
உன் கரம் காக்கும் என்றே
உறுதியாய் நம்பி நின்றோம்!
என்னடா இந்தத் தொற்று
எங்கெங்கோ வாயை வைத்து Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நெஞ்சின் சஞ்சலம் நீக்கு!

நாளை, மறு நாளை,என்னதான் ஆகுமோ?
நல்லை நாயகனே அதைப் பார்த்திடு!
சூழ்ந்த துன்பம்..யாம் தொட்டுப் பரவாமல்
சூரழித்த வேலால் நீ மறித்திடு!
பாழ்படர்ந்துமே பக்கத் தயலுக்கும்
பற்றிடாது நீ காப்பரண் போட்டிடு! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அருள் பொழிந்திடு!

ஊர்வெறித்தது! உள்ளங்கள் எலாம்
உள்ளிடிந்துமே அஞ்சுகின்றது!
வேர் விழுதிலும் தொற்றிடும் பிணி
வீழ்த்த…நாள் தொறும் சா மலிந்தது!
சீரளியுமோ நாளை என்று நம்
சிந்தை வேகுது! நல்லைச் சண்முகன் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நீ எல்லாம் பார்த்துக் கொள்ளு!

நீ எல்லாம் பார்த்துக் கொள்ளு!
நீ வரும் தடைகள் போக்கு!
நீ எது சரியோ… செய்து
நிம்மதி அயலில் ஊற்று!
நீ… வேலால்…தொற்றி மாய்க்கும்
நிட்டூரம் வீழ்த்து! கண்முன் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இன்றைய எளிய கனா

நாளை என்ன நடந்திடும் என்பதை
நானும் அறியேன்…நீயும் அறிந்திடாய்!
சூழும் என்ன வகையில் துயர் என
தொடர்பில் நிற்பவர் கூடத் தெரிந்திடார்!
வாழ்வின் பயணங்கள் நீளுமோ? நிற்குமோ?
மனதில் ஏக்கங்கள் சேருமோ? தீருமோ? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

காலச் சதி

தடுப்பு அணைகளினைத்
தம் இஷ்டம் போல் அடித்து
உடைத்துப் பெருக்கெடுக்கும்
ஊரெல்லாம் தொற்றாறு!
எங்கள் திசைகளின் இண்டிடுக்கு
மூலை முடுக்கு Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

எவரால் இயலும்?

சமூகம் ஒரு திமிர்க்குதிரை…வேகம் கொண்டு
தடைமீறிக் கட்டறுத்துப் புயலாய் மாறச்
சமயம் பார்த்திருக்கு(ம்) நெடுங் குதிரை…ஊரைச்
சாய்க்க அஞ்சா பெரு முரட்டுக் குதிரை…இந்தச்
சமூகமெனும் குதிரையினை அடக்கி ஆள,
சரியான வழி ஓட்ட, பயனைக் கொள்ள, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பசுங் கொற்றக் குடைகள்!

வெண்மையைப் பசுமை கருமையாய்
மாற்றுகிற
விந்தை அறிவீரா?
வேறொன்றும் இல்லையப்பா…
வெள்ளொளியை உறுஞ்சும் பசும் இலைகள்
நிழலென்று Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment