துயில்

மூன்றாம் பிறையினது மூலைகளில்
கயிறிணைத்துத்
தூளிகட்டி உன்னைத்
துயிலவைக்க நான் நினைக்க…
மூன்றாம் பிறையே முழுத்தூளி
என என்னை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மாற்றம்

திடீரென்று காற்று திசையினை மாற்றிற்று!
அடித்திங்கு நின்றகாற்று
அப்பக்கம் போயிற்று!
என்ன குழப்பம்?
எம்மீது ஏன் கோபம்?
என்னதான் காரணம்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இரவு

இரவினது மெளனத்தைக் கலைத்தது
பெருமூச்சினோசை.
கருமிருளில் புதைந்துளன
கணக்கற்ற ஏக்கங்கள்.
கவியும் குளிரில் களைத்து அடங்கிடுது
அவிந்த இதயத்தின் அனல். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தவிர்த்துச் செல்.

எழுதாதே கவிதைகளைத் தினமும்
என நீ சொன்னாய்.
சுவாசிக்க வேண்டாம் நீ தொடர்ந்து
எனச் சொன்ன
மாதிரி இருந்தது…
என் கவியே என் சுவாசம்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பொய்மைகள் என்றுதான் போகும்?

உண்மையாக உழைத்துக் களைப்பவன்
உரிமை, ஊதியம், பலன்கள், கவுரவம்
என்பவை இன்றி அவமதிக்கப் பட
ஏய்த்து மேய்ப்பவன் பொய்வேடம் பூண்பவன்
தன் நடிப்பால் உலகை மயக்குவோன்
தகுதிகள் அற்றும் தலைவனாய் மாறுவான்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஞான வழிக் கலங்கரை

நல்லைக் கந்தனின் கோவில் நிழல் இன்று
‘நாயன்மார்க்கட்டைத்’ தாண்டியே ‘செம்மணி’
எல்லை மட்டும் கவிந்து ஒளிர்ந்தது!
எவர்க்கும் தனது இருப்பிடத்தின் திசை
சொல்லியே வரவேற்றது! கம்பீரத்
தோற்றத்தில் ‘நல்லை வேலாய்’ நிமிர்ந்தது! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மாற்றம்?

வெளித்துக் கிடக்கிறது வானம்.
கவலையற்றுக்
குளிர்ந்து திரிகிறது காற்று.
வழமைபோல்
ஒளிர்ந்து மலர்கிறது பகல்.
வளங்கள் பெருகி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வியப்பு

கடல், ஆழி, சமுத்திரத்தை
தன் உள்ளங் கைகளுக்குள்
பிடித்திருக்கும் பூமி!
விரல்களெனக் கண்டம் ஐந்து!
விரல்களின் இடுக்குகளில் விழுந்து
நீர் ஒழுகாமல் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மரண வலை?

மீண்டும் அயலில் விழுந்ததா மரணவலை?
நீண்ட தனிமை
நிதான ஒடுக்கங்கள்
தாண்டிப் பழையபடி
தன்னிசையை மீட்க…அன்று
நரம்பறுந்த யாழ்…நரம்பைச் சீர்செய்து Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நீளும் இடைவெளிகள்

இடைவெளி பெருகிடுது…
எதை எவர்தான் தீண்டினாலும்
தொடலாம் மரணம்….கை தூர விலகிடுது!
யார்மேல் யார் பட்டாலும்
தொற்று நீக்கி தெளித்து
பேதமின்றிக் கைகூப்பும் பெருமை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அவதிப் புள்ளி

பாவத்தின் கூலி மரணமென நீ சொன்னாய்!
பாவத்தின் கூலி மரணம்
எனும் மறைநூலும்!
பாவங்கள் செய்யாதோர் பாரினிலே யாருண்டு?
பாவங்கள் யாவுக்கும்
மரணமா பதிலிங்கு? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அமுதன்

அமுதம் இருக்கிறது….
அதை நீ மலமென்றாய்!
அமுதம் அரிதான பொருள்;
எவரெவர்க்கும்
அமுதம் பெரிதான அருள்;
ஆம் அயலுயிர்க்கு Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இருளைச் சுடும் ஒளி

தீமை இருள் துரத்தி – பல
தீப வரிசை நிரலைப் பரப்பி…நற்
சாம ம் வரை கொழுத்தி – ஒளி
சாலைகள் வீடுகள் எங்கும் சுவறி..ஓர்
கோலம் இட அடுக்கி – மனம்
குளிரும் வரை திருக் கார்த்திகை நாளிலே Continue reading

Posted in நிகழ்வுகள் | Leave a comment

புயற் ‘புரவி’

எங்கிருந்து வந்தது இவ்வளவு மாரி?
எங்கிருந்து வந்தது இந்தளவு வெள்ளம்?
எங்கிருந்து வந்தது இந்தக் கொடுஞ்சூறை?
எங்கிருந்து வந்தது இந்தக் குளிர்க் கூதல்? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வெல்வோம்

ஏனடா இந்நிலை? இந்த உலகுக்கு
இன்று நோய் சூழ்ந்த வாழ்வு.
எப்படி வந்தது? எப்பழி தந்தது?
எங்கும் இறப்பின் சூழ்வு.
வான்புகழ் கொண்ட நம் வாசலைப் பூட்டிற்று
மற்றோனைத் தீண்டின் தொற்று Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment