கணிக்க முடியாது.

கணிக்க முடியவில்லை… காற்று புயலாவதனை.
கணிக்க முடியவில்லை…
கனமழை தொடர்வதனை.
கணிக்க முடியவில்லை… காற்றழுத்தத் தின்திசையை. Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கணிக்க முடியாது.

அமைதிப்புயல் ஃபெங்கால்

“அடக்கமுடையார்
அறிவிலர் என்று கருதிக்
கடக்கக்
கருத வேண்டாம்”
இக் கருத்தை வலியுறுத்த
இப் ஃபெங்காலை Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அமைதிப்புயல் ஃபெங்கால்

இன்றைய ஜனநாயகம்?

பாராளு மன்றைத் தெரிய
பழுதில்லாத்
தேர்தல் நடந்தது.
தேர்தலிலே போட்டியிட்டோர்
ஆர்வம் அளப்பெரிது.
‘இருநூற்றிருபத்தைந்து’ Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on இன்றைய ஜனநாயகம்?

புயலடிக்கப் போகிறதாம்…

புயலடிக்கப் போகிறதாம்.
புரட்டிற்று அறிவிப்பு!
புயலடித்தல் நிச்சயம்.
புயலெந்த வழியில் ‘கரை
கடக்குமெனக்’ கணித்தல் கடினம்.
“என்னவும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on புயலடிக்கப் போகிறதாம்…

தெரிவு

இன்னுமென்ன என்ன கொடுமைகள் கன்றாவி இங்கேநம்
முன்காண உள்ளோம்? முழுவிருப்பி னோடு முனைந்தாண்டு
சென்றவர்கள் போக… கிறுக்கர் புளுகர்
திறமையற்றோர்
இன்றெழுந்தார் எம்மை எடுத்தாள
என்ன இழவிதுவோ? Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தெரிவு

என்ன ஆகும்?

விழலுக்கு இறைக்கின்ற நீராய்த் தானே
வீழுது நம் வாக்குக்கள்; தேர்தல் என்னும்
தொழிலுக்குப் புதிதாகப் பலபேர் வந்து
சூழுரைத்துத் திரிகின்றார்.ஒன்றாய் அன்று
புழங்கியவர் தங்களுக்குள் குத்துப் பட்டு
புதிய புதிய கட்சி, சுயேட்சை, என்று Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on என்ன ஆகும்?

தெரிதல்

சகோதரம் எனப் ‘போட்டாய்’.
அயலான், உறவுகள்,
சகநட்பு, உனக்குத் தெரிந்த முகம்,
நினது
சாதி, குலம், சமூகம், சமயம், நிறம், இனமும்,
தான் என்றும் வாக்கிட்டாய். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on தெரிதல்

வழி

எத்தனை முகங்கள் எங்கள் சுவர்களிலே?
எத்தனை முகங்கள்
புதிதாய்ச் சிரித்தபடி?
எத்தனை முகங்கள் கைகூப்பி கைகாட்டி?
எத்தனை முகங்கள்?
இன்றுவரை நாமறியா Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on வழி

கந்தஷஷ்டி

தேவர் துயரிடர்கள் தீய்க்கச் சிவன்விழியில்
ஆறு பொறியாய் அவதரித்து – தாமரைகள்
ஆறில் தவழ்ந்தே அறுமுகனாய் ஆனவனால்
ஊறு தொலையும் உணர். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on கந்தஷஷ்டி

என்னதான் மிஞ்சும்?

‘A’ வந்து போனார் இருநாளின் முன்; இங்கே
‘B’ வந்தார் நேற்று;
இன்றைக்குப் பின்னேரம்
‘C’ வந்து கூட்டம் போடுவதாய் அறிவிப்பு!
இந்தமுறை… ஆங்கில
இருபத்தா றெழுத்து தாண்டும் Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on என்னதான் மிஞ்சும்?

எப்படித்தான் ஓடிற்று இருபத்தேழு நாட்கள்?

வில்லங்கம் ஏதுமின்றி வெகு விமரிசையாக
‘நல்லூர்த் திருவிழா’
நடந்து முடிந்ததென
நிம்மதிப் பெருமூச்சு நிறைகிறது! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on எப்படித்தான் ஓடிற்று இருபத்தேழு நாட்கள்?

யானிருப்பேன் என்று…

என் வாழ்வில்; நாற்பத்தைந் தாண்டின்மேல்…
யான் பிறந்த
என்நல்லூர் மண்ணிருந்து
‘எனக்கு நினைவு
என்று தெரியத் தொடங்கியதோ’ அன்றிருந்து…
கண்டு சிலிர்த்துள்ளேன்… Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on யானிருப்பேன் என்று…

காவல் தெய்வம்

காலனாக வந்து மண்ணில் வாழுகின்ற வைரவர்.
காவல் நின்று ஊரை வாழ்த்தும் ‘மண்டையோட்டு மாலையர்’.
சூலம் வீசி தீ நுதல்களாலே தீமை தீய்ப்பவர்.
தொல்லை செய்யும் மாய மந்திரம் துரத்திச் சாய்ப்பவர். Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காவல் தெய்வம்

அனுதினமும் அலங்காரம்.

‘அலங்காரக் கந்தனுக்கு’ அனுதினமும்…
விதவிதமாய்
அலங்காரம்!
வெவ்வேறு அழகு நிற மலரில்
மாலை புனைந்து;’சாத்துப் படி’
வடிவாய்ச் சோடித்து; Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on அனுதினமும் அலங்காரம்.

காத்து நமையுயர்த்து!

நெஞ்சின் கவலையிடர் நீறவைத்து,
நம்மனதின்
சஞ்சலங்கள் சாய்த்து,
தலைகோதி மெய்வருடித்
தஞ்சமும் தந்து,
தழுவிடுவான் நல்லூரான்! Continue reading

Posted in கவிதைகள் | Comments Off on காத்து நமையுயர்த்து!