இரவின் பிடியில்

கருமை நிறவானாம்
தீப்பெட்டிச் சுவரின்
மருந்தில்…விண் கற்கள்
தீக்குச்சிகளாய் வழுக்கி
உரச…அவை எரிந்து ஒளிகொடுத்துச்
சாம்பலாகும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

புதுக்கவி

“ஆடத் தெரியாதோன்…..
மேடை சரி யில்லை”யென்ற
வேடிக்கை தாண்டி
விவகாரமாய் நின்ற
ஆடத் தெரியாதோன்…. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

செய்வது ஏன் துரோகம்?

வீசி நுரை வீசி அலை மூசி விளையாடும்.
வீடுவரை தேடிவரும் தென்றல் சுகம் கேட்கும்.
ஓசை கடலோசையுடன் மீன்களது பாட்டும்
ஓடங்களின் கானங்களும் கூடும்…சுதி சேரும்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தழைப்போம் ஒருநாள்

வெடிகள் அதிர்ந்தாலும் இடிகள் விழுந்தாலும்
விடிவின் ஒளிக்கீற்றைக் கண்டோம் –ஒரு
விடியல்… இருள்சூழ்ந்த பொழுது கனவோடு
விழிகள் குருடாகி வெந்தோம் !
அடிகள் விழும் மேலும் கொடிகள் அறும்…மீள
அருள துணையின்றி நொந்தோம் –முழு
அழகு தொலைந்தின்று அடிமைச் சுகம் கண்டு
அசந்து துயில் கொள்ளு கின்றோம் ! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஏன் தொடருதெங்கள் நிலச் சோகம்?

ஈரவிழி ஓரம் ஏறுதொரு சோகம்
ஏன் துடைக்க யாருமில்லை பாரு?
ஏங்கிவிழும் போதும் எண்ணி அழும் போதும்
ஏன் அணைக்க தோள்களில்லை கூறு?
பாரமனம் தன்னை பார்த்து சுமைதாங்க Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தணிப்பு

நெருப்பே வெக்கையிலே நீறும்
இக் கோடையிலே….
மர நிழலும் எரிந்து கருகுகிற வேளையிலே…
சூரியனும் புவிவெப்பம் சுட்டு
நடுங்கையிலே… Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

அறம்

வண்ணத்துப் பூச்சியொன்று
சிலந்தி வலை சிக்கி
“என்னென் றிதிலிருந்து எழுந்து மீளத் தப்புவது”
என்று சிறகடித்து அடித்து
வலைநூலை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நாளையை நம்பு

எங்கும் அடிதடி எங்கும் கொலைவெறி
எங்குஞ் சண்டித்தனம் ஆச்சு –யார்….அம்
பெய்த விழுதெங்கள் மூச்சு? –அட
தங்கு தடையின்றி தாயின் தமிழ் வென்ற
சாலைகளில் வாளின் வெட்டு —தினம்
சாகும் இனம் வதை பட்டு! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

வெளிச்சம்

கருவி பிழைவிடாது கடைசிவரை
என உரைத்து
கரங்கள்தான் பிழையை விட்டு இருக்கவேணும்…
பொறுக்கிய போதல்ல
அனுப்பிய போதென்று…அவ் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

என்னையா பிடிக்கும் உனக்கு?

புறாவின் உடல் எடைக்கு பொருளாக
தன் தசையை
அரிந்தீந்த ‘சிபி’ போல
அருளும் வலிமை இல்லேன்!
எனது உடலினிலோ இதயத்திலோ பிய்த்து Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உலகு

நீயுந்தான் சூழல், நினது சிறு நட்பு வட்டம்,
சேர்ந்த குழுமம்,
சிலிர்த்து வாழ்த்தும் சுற்றத்தார்,
சூழ ஒரு உலகத்தை சிருஷ்டித்து
அது ஒன்றே Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சாபம்

கனவுகளின் சாம்ராஜ்யம்
கண்முன் கருகிவிட
நனவுகளும் நீறியே
சாம்பலான நன் நிலத்தில்
அங்கங்களை இழந்தும், Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பாரம்

“வருத்தங்கள் பட்டுப் பாரம் சுமப்பவரே
அருகினிலே வாருங்கள்
அயர்வகற்றி உமைவருடி
விருந்து தருவேன்யான் விரைந்து ”
என… என்றோ Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மரிப்பும் உயிர்ப்பும்

மதத்துவேசம் என்ற மாபெரிய
சிலுவையில்….தற்
கொலைக்குண்டு வெடிப்புச் சிதறலென்னும்
ஆணிகளால்
அறையுண்டு இயேசு…மீண்டும்
ஆவி துறந்து …இவ் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கொடு பதில் தெளிவாய்

ஆயிரம் புத்தி அனைவர்க்கும் சொல்லி
ஆனது என்னதான் முடிவில்?
ஆம்…பிழை செய்தே அடைகிறார் வெற்றி
அதர்மமே ஆழுதெம் திசையில்.
கோயிலில் சூடம் கொளுத்தியும் …பாவம் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment