உயிர்த்த ஞாயிறு

மனிதர்களை வாழ்விக்க 
இயேசுபிரான் உயிர்த்த நாளில் 
எவர்களினை வாழ்விக்க 
இப்பலிகள் எடுத்தார்கள்?
இனப்போர் முடிந்து எழுந்த போதைப் 
போர் மூண்டு 
தணிந்திடுமுன் மதப்போர் தனைத்தூண்ட 
இதயத்தை 
பிடுங்கி எறிந்துவிட்டா 
பேய்க்குண்டு பொருத்தினார்கள்?
“வெடிக்கவேணும் அமைதி” என்று 
எவ் இறையை நேர்ந்தார்கள்??

21.04.2019

Posted in கவிதைகள் | Leave a comment

நாளை

கண்ணைத் திறந்து களநிலையை நீபாரு!
மண்ணில் புரண்டு வடிவிழந்து
நம் கொற்றம்
நாளும் பொழுதும் நடுஇரவும்
வந்துபோகும் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உன்னுடைய தீர்ப்புக்கள்

நீகண்ணை மூடுவதால்
நினக்கே இருளுமன்றி
பூமிக் கிருளாது !
புரிந்துகொள்ளும் மனநிலையில்
நீயிருக்க மாட்டாய்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

இணையடி நிழல் தருக!

வானே வருக! வரந்தந்து எம் வளியில்
கானல் அகற்றி
ஈரப்பதன் கரைக்க!
சூழும் தொடர்வரட்சி தோற்றுக்
குளிர்உலவ Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

உலகு

நீயுந்தான் சூழல், நினது சிறு நட்பு வட்டம்,
சேர்ந்த குழுமம்,
சிலிர்த்து வாழ்த்தும் சுற்றத்தார்,
சூழ ஒரு உலகத்தை சிருஷ்டித்து
அது ஒன்றே Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

என் கவிதை

இந்த உலகில் இருக்கும் அனைவரையும்
எந்த ஒரு கொம்பனாலும்
திருப்திப் படுத்திவிட
முடியாது….என்பதுபோல்
எல்லோரும் விரும்ப வல்ல Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சரி செய்!

விழுந்துதான் எழும்பு கின்றாய்.
வீதிகள் தோறும் சுற்றி
அழுது அர்ச்சனைகள் செய்தாய்.
அபிஷேகம் வாரா வாரம்
பழுதின்றிப் புரிந்தாய். அள்ளிப் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கலை ஞானி

இயற்கை தனது எளிய கரங்களால்
எங்கு எங்கோ நிறங்கள் தொகுத்து தான்
முயலாது தென்றல் தூரிகை யால் தொட்டு
முங்கி எடுத்து மோனமாக மிக
இயல்பொடு வரைகின்ற வகை வகை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சரிதம்

வாழும் வகையறியோம் –எங்கள்
வாழ்வினுக்கு வரம்பேதறியோம்.
வாழ்வில் வளம் பெருக்கும் –வழி
வாசல் எவையென யாம் புரியோம்.
ஆளும் முறைதெரியோம் –அர
சாட்சியின் நுட்பங்கள் யாதுணரோம்.
ஆயினும் வாயின் வீச்சால் –இந்த
அண்ட சராசரம் போய் வருவோம். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கவிப்பணி

கவிதையோ ஒரு சுட்ட ரவையென,
கவிதையோ ஒரு அக்கினிக் குஞ்சென,
கவிதையோ ஒரு நல்ல விதையென,
கவிதையோ ஒரு வீரிய விந்தென,
கவிதையோ துளி அமிலம் விசமென
கவிதையோ மனதில் விழும் சொல்லென
புவியில் நேரடியாய் எம் மாற்றமும்
புரிவதில்லை; தாக்கம் புரிவதும் இல்லை! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

முகம்

முகத்துடனே வந்தாய் என் முன் என்று
தான் இருந்தேன்!
முகமூடி அது என்று
முடிவில் தான் கண்டுகொண்டேன்!
முகமூ டியே முகமாய் மூட, Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நடு நிலை

எனது சொந்த விருப்பு வெறுப்புக்காய்,
எனது நட்டம்
இலாபம் இவற்றுக்காய்,
என்னுடைய நன்மைக்காய்,
என் தப்பிப் பிழைப்புக்காய், Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தூர்

இரவுதனைத் தூர் வாரி
எங்கே தான் கொட்டிற்றோ ….
வருமிந்தப் பகற்பொழுது?
மாலை வாடப்… பகல் தன்னை
தூர்வாரி எங்கேதான் கொட்டிடுமோ
துயர் இரவு? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மீண்டெழுவாய்

கண்களில் நீர்த்துளி கண்டு துடைத்துக்
கசிந்து உருகுகிறேன். –உந்தன்
கால் கையில் காய்ந்து உறைந்த குருதியை
கழுவி அகற்றுகிறேன். –உடற்
புண்களின் சீழினை ஒற்றிப் புதுத்துணி
போட்டு மருந்திடுவேன். –சிறு Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நதிகளின் கனவுகள்

கடலுக்குப் புரியாது நதிகளது கனவுகள்!
கடல் தேடிப் பாய்ந்து ,
களைத்து வந்து ஆர்ப்பரித்து,
கடலோடு சங்கமித்துக், களித்து,
இரண்டறவே Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment