சிறப்பு

பார்த்துக் கொண்டிருந்தேன்
பரந்த பெருங் கடலை ….
பார்க்க விரிந்து கடலளவாய் ஆச்சு மனம்!
நீந்தத் தொடங்கினேன்
நெடிய அலைகடலை…. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

‘படைப்புழு’ புழுத்து….

எங்கிருந்து வந்தன இந்தப் படைப்புழுக்கள்?
இங்கிருந்தே போனவையோ?
இங்கு நேற்று அழித்தவையோ?
தங்கள் உருமாற்றி தங்கள் குணம் மாற்றி
தங்கள் தடம்மாற்றி Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நோக்கு

மீன்களின் கண்களுக்கு விளங்கும்
கடல் நீளம்.
ஆந்தையின் கண்கள் அறியும்
இரவின் ஆழம்.
சீயத்தின் கண்களுக்குப் புரியும்
வனத்தின் எல்லை. Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

கவிஞனும் சிவனே !

கடலாழ மான கவிதைகள் பாடி
ககனத்தை அளப்பானாம் கவிஞன் .
கனவுக்குள் நீந்தி நனவுக்குள் நோண்டி
கவின் நூறு காண்பானாம் கலைஞன். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

ஓயாத வாழ்க்கை!

ஓயாது அலையடிக்கும் உலராத கடல்,
நித்தம்
ஓயாது கோலமிடும்
ஒய்யார முகிலினங்கள்,
ஓயா இயற்கையின் உயிர்மூச்சாய் காற்று,
அதன் Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

பொங்க வேண்டும்

தெருவெலாம் பொங்க வேண்டும்.
திசையெல்லாம் பொங்க வேண்டும்.
தரிசுகள் திருத்திப் …பஞ்சம்
தரித்திரம் பசியும் சாகும்
வரை..நிதம் பொங்க வேண்டும். Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தெம்பூட்டு எம்மைத் திருத்து

கல்லாத பேரும் கவிபாட வைக்கும்
கலைஞானம் தந்த தமிழே!
கண்முன் சுரந்து கருணை புரிந்து
கடமை உணர்த்தும் பொருளே!
செல்லாத காசு இலை நாங்கள் என்று
சீர், சொத்து நல்கும் திருவே! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நாடு

மாறுபட்ட மனம் கொண்ட
பல கூட்டம் குழு வகையும் ,
வேரறுத்து முதுகினிலே குத்தி
வெளியினிலே
பாசம் பொழியும் உட் பகையும் ,
ஆள்வோனை Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சூரன் போர்

சூரனுக்கும் முருகனுக்கும் தொடங்கியதே
சூரன் போர்.
ஆணவம்,கன்மம், மாயை — யாம்
மும் மல அசுரர்
தர்மத்தைத் தாக்க Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

புது(திர்)க் கோலம்

புள்ளிகளைச் சேர்த்துப் போட்டோம் 
புது(திர்)க் கோலம்.
புள்ளிகள் ஒருவரிடம் 
போதா திருந்ததனால் 
அவரிடம் இருந்த அவருடைய புள்ளிகளை, 
இவரிடம் இருந்த இவருடைய புள்ளிகளை, 
உவர்க ளிடம் இருந்த உதிரியான புள்ளிகளை,
என்றும் இலாதவாறு இணைத்துக் 
கலந்து புது 
Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தொடர்பு

தூண்டிலிலே முள் கொழுவி,
துளி உணவால் ஆசைகாட்டி,
மீனினை ஏமாற்றிப் பிடித்து விலைபேசி,
யாருக்கோ விற்று இலாபமீட்டி —
ய(ம)வன் குலத்தில்
ஒராளை யேனுந்தான் பழிவாங்க
நினைத்த அதே Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

தவமும் வரமும்

நீ கதைக்க நானுனக்குத்
தெம்பைத் தருகின்றேன்!
நீ சிரிக்க எனது மகிழ்வை அருள்கின்றேன்!
நீ அசைய நானுனக்கு
சக்தியை ஊட்டுகிறேன்! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

நாளையும் போம்

வேளை நெருங்கிடணும் –விடிவொன்று
வென்று வரவேணும் –வெறும்
பாழைச் சுமந்த நிலம் –பச்சைசாத்தி
பலனைப் பெறவேணும் –இன்று
வாளைச் சுழற்றுபவர் –அகன்றவர்
வாலும் அறவேணும் –நாங்கள்
ஊழை ஜெயித்தவர்கள் –எனப்பிற
ஊர்கள் சொ(ல்)ல வேணும் ! Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

சுரணை

யாருக்கு இங்கே எதைப்பற்றி கவலையுண்டு?
யாரெவர்க்கு மனிதத்தைப்
பற்றி அக்கறையுண்டு?
தாமுண்டு, தம்பாடு உண்டு, தொழில் உழைப்பு
சோறுண்டு, என்பதன்றி
யார்க்குச் சுரணையுண்டு? Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment

மழை ஏக்கம்

துளிகளை ஊசிகளாய் ஆக்கி
தொடுகைமுறை
சிகிச்சை ‘அக்குபஞ்சர்’
செய்கிறது தூறல் மழை!
அண்ணாந்து பார்த்தேன்;
பெண்மை முகிற் கைகளினால்
எண்ணற்ற துளிகள் அள்ளி
என் முகத்தில் நீர்க்கோலம்
வரைகிறது; Continue reading

Posted in கவிதைகள் | Leave a comment